Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரொப் வோல்டர் நியமனம்

Posted on June 6, 2025 by Hafees | 468 Views

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ரொப் வோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) பயிற்சியாளராகப் பணியாற்றுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட்டுடன் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

வோல்டரின் முதல் போட்டித் தொடராக, சிம்பாப்வேயில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டி20 முத்தரப்புப் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.