(அபூ உமர்)
அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் பணியாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் (performing principal) எதிர்நோக்கும் நீண்டநாள் பிரச்சினைகள் குறித்து எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும்.
அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் பணியாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் (performing principal) எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் அவர்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் 2025.12.20ம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்.
அம்பாறை மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்