நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட உயர்மட்ட அரச தலைவர்களை இன்று சந்திக்கவுள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரை இன்று முற்பகல் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர், இணைந்த ஊடக சந்திப்பொன்றும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
தொடர்ந்து இன்று மாலை அவர் நாட்டிலிருந்து புறப்பட்டு இந்தியாவிற்குச் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.