(அபூ உமர்)
வட்டார ரீதியில் மக்களை சந்திக்கும் நிகழ்வின் ஓர் அங்கமாக அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரத்தின் அட்டாளைச்சேனை 05, 09 பிரிவுகளின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் இன்று (24.12.2025) அட்டாளைச்சேனை 05ல் அமையப்பெற்றுள்ள சகோதரர் ஐ.எல்.ஹாறூன் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ ஏ.எஸ்.எம்.உவைஸ், கௌரவ உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ், ஏ.எல்.பாயிஸ், ஐ.எல்.அஸ்வர், கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான றியா மசூர் மற்றும் கிளைக்குழு உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.





