தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஆறாம் தரம் ஆங்கில பாடத் தொகுதி (Module) தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தன்னைப் பதவியில் இருந்து விலக்கிக் கொள்ளும் முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஆறாம் தரம் ஆங்கில பாடத் தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளத்தின் பெயர் ஒன்று இடம்பெற்றுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.