Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

10ஆம் திகதி முதல் தென்மேற்கு பகுதியில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Posted on June 8, 2025 by Hafees | 277 Views

நாட்டின் தென்மேற்கு பகுதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல், மழையுடன் வானிலை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலும், நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன், வடக்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில், பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.