Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பாடசாலையின் அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்

Posted on June 8, 2025 by Admin | 308 Views

பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்பு பரவல் நோய்கள் தடையின்றி பரவாதிருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கல்வி அமைச்சு புதிய வழிகாட்டல் பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப் பத்திரம், ஏற்கனவே வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017 சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக, சுற்றுச்சூழல்த் தூய்மை மற்றும் நுளம்பு இனப்பெருக்கம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் பல பரிந்துரைகளை உள்ளடக்கியது.

வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் போது நுளம்பு இனப்பெருக்கத்திற்கான இடங்கள் கண்டறியப்பட்டால், அந்த பாடசாலையின் அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பாடசாலை வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு பராமரிக்க, கல்வி நடவடிக்கைகளுக்குத் தடையில்லாமல் ஒரு உள் செயற்திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த வழிகாட்டல் பத்திரம், அனைத்து அரச பாடசாலைகள், அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள், பிரிவேனாதிபர்கள், தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபர்கள், மாகாணக் கல்வி அலுவலகங்கள் உள்ளிட்ட பொறுப்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.