Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

Posted on January 31, 2026 by Admin | 362 Views

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகிய இரு எரிபொருள் வகைகளின் விலைகள் லீட்டருக்கு ரூ.2 வீதம் குறைக்கப்பட்டுள்ளன.

திருத்தத்துக்குப் பிந்தைய புதிய விலைகள் வருமாறு:

  • லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன்
    தற்போதைய விலை – ரூ.294
    குறைக்கப்பட்ட தொகை – ரூ.2
    புதிய விலை – ரூ.292
  • லங்கா ஓட்டோ டீசல்
    தற்போதைய விலை – ரூ.279
    குறைக்கப்பட்ட தொகை – ரூ.2
    புதிய விலை – ரூ.277

அதேவேளை ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவை முன் நிலவிய விலைகளிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மாற்றமின்றி தொடரும் எரிபொருள் விலைகள்:

  • லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் யூரோ 4 – ரூ.340
  • லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 – ரூ.323
  • லங்கா மண்ணெண்ணெய் – ரூ.182

இந்த புதிய விலைத்திருத்தம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.