Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை  House of English நிறுவனத்தின் வித்தியாரம்ப விழா

Posted on February 6, 2026 by Admin | 396 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை House of English நிறுவனத்தின் முன்பள்ளி மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ரி.நகீல் தலைமையில் அதிபர் எம்.எஸ்.ஜெனீஸின் ஒருங்கிணைப்பில் 2025.02.03ம் திகதி சாரா பீச் ரிசோர்டில் மக விமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சவூதி தூதரக அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம்.ஏ.நஜீட்,  முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.கே.முஹம்மட்,  முன்னாள் அதிபர் எம்.ஏ.அன்சார், ஆசிரிய ஆலோசகர் என்.ரி. நசீர் மெளலவி மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் இவ்வாண்டுக்கான நான்கு பயிற்சிப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.