Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

இந்தியாவின் பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted on February 9, 2026 by Admin | 108 Views

டெல்லியில் உள்ள ஒன்பது பாடசாலைகளுக்கும் இந்தியப் பாராளுமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி பொலிஸின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று (09) காலை 8.30 மணி மற்றும் 9.00 மணியளவில் இரண்டு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த மின்னஞ்சல்களில், “டெல்லி காலிஸ்தானாக மாறும். இன்று பாராளுமன்றத்திற்குள் குண்டு வெடிக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மிரட்டல் அப்சல் குரு மற்றும் காலிஸ்தான் தேசிய இராணுவத்தின் பெயரில் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாராளுமன்ற சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பல பாடசாலைகளின் பெயர்களையும் குறிப்பிட்டு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, டெல்லி முழுவதும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், டெல்லி பொலிஸார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பாராளுமன்ற வளாகத்திலும் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு விரிவான சோதனைகள் தொடர்ந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்