Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

இலங்கையில் இன்று வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

Posted on February 17, 2026 by Admin | 523 Views

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்றைய தினம் சரிவைக் கண்டுள்ளன. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் பிரதிபலித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (17) உள்நாட்டில் தங்கத்தின் விலையில் குறைவு பதிவாகியுள்ளது.

தற்போதைய விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 3,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 3,60,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ. 48,750க்கும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ. 45,088க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தை மாற்றங்களின் பின்னணியில் உள்நாட்டு தங்க விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.