Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜயசூரிய விலகல்

Posted on February 28, 2026 by Admin | 622 Views

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை அணியின் இன்றைய (28) பல்லேகலப் போட்டி தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய அவர்களின் கடைசி போட்டியாக அமைய உள்ளது.

தொடர் ஆரம்பிக்கும்முன்னரே்இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். அந்த முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘அத தெரண’ வெளியிட்ட கேள்விக்கு பதிலளித்த ஜயசூரிய, தலைமைப் பயிற்சியாளர் ஒப்பந்தக் காலம் இன்னும் எஞ்சியிருந்தபோதிலும், அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

2024 ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது இடைக்காலப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஜயசூரிய தலைமையிலான காலப்பகுதியில் இலங்கை அணி அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 74 போட்டிகளில் பங்கேற்று 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் சந்தித்துள்ளது. மேலும் இரண்டு போட்டிகள் முடிவின்றி நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் பல்லேகலாவில் நடைபெறும் இன்றைய போட்டி ஜயசூரியவின் பயிற்சியாளர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.