அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருகின்றன என்ற தனது கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக மறுத்துள்ளது.
இந்தக் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் உலகளாவிய எரிசக்தி விலைகளின் உயர்வை கட்டுப்படுத்துவதற்கும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் பெறுவதற்கும் அரசியல் நோக்கத்துடன் இவ்வாறு கூறப்பட்டதாகவும் ஈரான் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில் பிராந்திய பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சில நாடுகள் முன்வைத்துள்ள பரிந்துரைகள் மட்டுமே தற்போது பரிசீலனையில் உள்ளன என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ‘மெஹ்ர்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் “இந்த மோதலைத் தொடங்கியது ஈரான் அல்ல. ஆகையால் முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் ஆலோசனைகளும் வொஷிங்டனை நோக்கி இருக்க வேண்டும்” என ஈரான் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.