Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

மார்ச் மாத அஸ்வெசும கொடுப்பனவு பற்றிய அறிவிப்பு

Posted on March 25, 2026 by Admin | 321 Views

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவுகள் நாளை (26) முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட 6 இலட்சத்து 22 ஆயிரத்து 462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக அரசாங்கம் ரூபாய் 3.1 பில்லியன் தொகையை ஒதுக்கியுள்ளது.


இரண்டாம் கட்டமாக தகுதி பெற்ற மேலும் 71 ஆயிரத்து 339 முதியோர்களுக்கு மொத்தம் ரூபாய் 356 மில்லியன் வழங்கப்படவுள்ளது.

இந்த நிதி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக நாளை (26) வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தகுதி பெற்ற முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மார்ச் 26ஆம் திகதி முதல் தங்களது வங்கி கணக்குகள் மூலம் ‘அஸ்வெசும’ நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.