Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இடைநீக்க உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு (வேட்பாளர் ரவி குமுதேஷ்)

Posted on June 10, 2025 by Hafees | 162 Views

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக, நிறுவன விதிகளை மீறியதற்காக பணியிலிருந்து நேற்றைய தினம் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அது குறித்து தனக்கு உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பணி இடைநீக்கம் தொடர்புடைய கடிதம் ஊடக நிறுவனங்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அவ்வாறு செய்வதன் மூலம், சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தன்னையும் பிற தொழிற்சங்கங்களையும் மிரட்ட முயற்சிக்கிறார் என்றும் ரவி குமுதேஷ் வலியுறுத்துகிறார்.