Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

மறு அறிவித்தல் வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் நிறுத்தம்

Posted on March 26, 2026 by Admin | 357 Views

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை (27) முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கணினி அமைப்பு சீரமைக்கப்பட்டு மீண்டும் வழமையான நிலைக்கு திரும்பும் வரை சேவைகள் வழங்கப்படமாட்டாது என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.