Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

பொசன் பண்டிகையை முன்னிட்டு இலவச விசேட ரயில் சேவைகள் அனுராதபுரத்திற்கு

Posted on June 10, 2025 by Hafees | 248 Views

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் பல முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 20 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரை 35 ரயில் சேவைகள் இடம்பெறுமென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவைகள் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இதேவேளை ஆரம்பமாகியுள்ள தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறையிலிருக்கும்