Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

நற்பிட்டிமுனை அல்-கரீம் பெளண்டேஷன் ஏற்பாட்டில் சாதனையாளர் பாராட்டு விழா

Posted on June 10, 2025 by Admin | 146 Views

நற்பிட்டிமுனை அல்-கரீம் பெளண்டேஷன் அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா இன்று (ஜூன் 10) சவளக்கடை ரோயல் காடன் வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளர் மற்றும் சட்டத்தரணி C.M. ஹலீம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக, பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அஷ்ரப் தாஹிர் கலந்து சிறப்பித்தார்.

சமூகத்துக்காக சிறப்பாக கல்வியில் முன்னேறிய மாணவர்கள் மற்றும் பல பிரமுகர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட முக்கியமானோர் வரிசையில், அம்பாறை மாவட்ட கட்சி செயற்குழுத் தலைவர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அப்துல் றஷாக் ஜவாத், அல்-கரீம் பெளண்டேஷனின் தலைவர் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் C.M. முபீத், ஓய்வு பெற்ற வலயக் கல்வி பணிப்பாளர் அப்துல் ஜெலீல், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் S. முஹம்மட் அலி ஜின்னா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இவ்விழா, மாணவர்களின் ஊக்கத்தைத் தூண்டும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது.