Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

Posted on June 11, 2025 by Admin | 227 Views

இன்று (ஜூன் 11) மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் அந்தத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலைத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வானிலை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.