Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட எரிபொருள் விலை 

Posted on May 3, 2026 by Admin | 201 Views

ஶ்ரீலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026.05.02ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

அதன்படி லங்கா ஓட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டு புதிய விலை ரூ.392 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லிட்டருக்கு ரூ.15 அதிகரிக்கப்பட்டு ரூ.458 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லிட்டருக்கு ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.470 ஆகவும், லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லிட்டருக்கு ரூ.12 அதிகரிக்கப்பட்டு ரூ.410 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் லங்கா மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டு புதிய விலை ரூ.265 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.