Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

மத்திய அதிவேக நெடுஞ்சாலை குருநாகல் முதல் தம்புள்ளை வரையான பகுதியில் நிர்மாணிக்க நடவடிக்கை

Posted on June 11, 2025 by Hafees | 182 Views

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் IV கருத்திட்டத்தை குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரையான பகுதியை நிர்மாணிப்பதற்காக தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள காணிக் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09.06.2025 நரடபெற்ற அமைச்சரவையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் IV (குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரை) நிர்மாணிப்பதற்காக கையகப்படுத்தப்பட்டு பகுதியளவில் இழப்பீடு செலுத்தியுள்ள காணிகளுக்கான எஞ்சிய இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கும், இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படாத காணித்துண்டுகளுக்கு காணிக் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் சுவீகரிப்பதற்கும் 2023.03.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் IV கருத்திட்டத்தின் காணி கையகப்படுத்தல் செயன்முறையின் பௌதீக ரீதியான முன்னேற்றம் 73.2மூ வீதமாகும். குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு அணுகுவதற்கு அளவுசார் மற்றும் பண்புசார் வீதிக்கட்டமைப்பின் தேவையைப் பூர்;த்தி செய்வதற்கும், ஒட்டுமொத்த மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளால் எதிர்பார்க்கப்படும் முழுமையான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் IV இனைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.