Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை ரஹ்மானிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் புதிய மிம்பர் அங்குரார்ப்பண நிகழ்வு

Posted on May 14, 2026 by Admin | 278 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை 07, மஸ்ஜிதுர் ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மிம்பரின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை (15) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அப்ரார் பவுண்டேஷனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஹ்ரம் அபூபக்கர் (நளீமி) கலந்து கொண்டு ஜும்ஆ பிரசங்கத்தை நிகழ்த்தவுள்ளார்.

பள்ளிவாசலின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மிம்பர் சமூதாய மற்றும் மார்க்க நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்நிகழ்வானது ACMYCOFFICIAL எனும் முகப்புத்தகத்தினூடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.