Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இராஜினாமா

Posted on May 29, 2026 by Admin | 202 Views

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி செயலாளர் கபில பெரேராவுக்கு எதிராக அண்மையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நீதிமன்றத் தீர்ப்பை அடுத்தே அவர் தனது பதவியை இராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனது இந்தத் தீர்மானம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அவர் ஏற்கனவே விளக்கியுள்ளதுடன், பதவியிலிருந்து விலகுவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர், பேராசிரியர் கபில பெரேரா மீண்டும் பல்கலைக்கழக கல்விச் சேவையில் இணைவதற்குத் தயாராகி வருவதாகத் தெரியவருகிறது. இவர் இதற்கு முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.