Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

8 வயது சிறுவனின் வாயில் தீயால் சூடு வைத்த தந்தை

Posted on May 29, 2026 by Admin | 223 Views

மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனைப் பகுதியில் 8 வயதுடைய சிறுவனின் வாயில் அவரது தந்தையே தீயினால் சூடுவைத்து கொடூரமான முறையில் காயத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்தபோது சிறுவன் தவறான வார்த்தைகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் கோபமடைந்த தந்தை, அதற்குத் தண்டனை வழங்குவதாகக் கூறி தனது மகனின் வாயில் தீயினால் சூடு வைத்துள்ளார் என்று சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட சந்திவெளி காவல்துறையினர் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு அவரது தந்தைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.