Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இந்தியாவில் மீண்டும் ஒரு ஹெலிகொப்டர் விபத்து 7 பேர் பலி – குழந்தையுடன் விமானி உட்பட அனைவரும் உயிரிழப்பு

Posted on June 15, 2025 by Hafees | 179 Views

இந்தியாவில் உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகொப்டர் காணாமல் போனது.

இந்த நிலையில் குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர், கௌரிகுண்ட் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த விமானி உட்பட 7 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில் குழந்தையும் அடங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்திற்கு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டரில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகொப்டர் வழி தவறி சென்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 12-ம் திகதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஹெலிகொப்டர் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது