மொரட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உணவகத்தின் மேல் தளத்திற்கு குறித்த இளைஞன் செல்லும் போதே இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.