Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்வருக்கு கௌரவிப்பு விழா

Posted on July 3, 2026 by Admin | 193 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹபீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நீண்டகாலமாக கிராம உத்தியோகத்தராக நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் மக்கள் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற எம்.ஐ.எம். அஸ்வர் அவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா அட்டாளைச்சேனை 12ஆம் வட்டார சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் மிக விமரிசையாக நடத்தப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அகமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற அதிகாரி எம்.ஐ.எம். அஸ்வர் அவர்களின் நீண்டகால நற்பணிகளைப் பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து கிராம மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

இவ்விழாவில் பிரதேசத்தின் சமூகப் பெரியோர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.