Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

புதிய பேருந்துத் திட்டமானது ‘எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளான ஒரு பேரழகியைப் போன்றது’

Posted on July 6, 2026 by Admin | 175 Views

இலங்கைக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மெட்ரோ பேருந்துகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த புதிய பேருந்துத் திட்டத்தை ‘எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளான ஒரு பேரழகி’ உடன் ஒப்பிட்டு அவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அழகிய பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை தற்போதைய இந்த புதிய பேருந்துத் திட்டமானது ‘எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளான ஒரு பேரழகியைப் போன்றது’.

சுமார் 4 கோடியே 20 லட்சம் அல்லது 4 கோடியே 30 லட்சம் ரூபாய் என்ற பெரும் செலவில் இந்த பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இந்த முதலீட்டுக்கு இணையான சேவையை வழங்கி, திட்டத்தை இலாபகரமாக இயக்குவது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்று என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கசப்பான உண்மையை மறைத்துவிட்டு இத்திட்டத்தை முன்னெடுப்பது பொதுமக்களின் வரிப்பணத்தையும், திறைசேரியின் நிதியையும் வீணடிக்கும் ஒரு செயலாகவே முடியும் என்றும் கெமுனு விஜேரத்ன மேலும் எச்சரித்துள்ளார்.