Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மண்சரிவு அபாய எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் 2025 ஜூன் 16 முதல் 17 வரை பாதுகாப்பு அறிவுறுத்தல்

Posted on June 16, 2025 by Hafees | 484 Views

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அகலவத்த, வலல்லாவிட, பாலிந்தநுவர, புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் கங்கை கோறளை, கோகாலை மாவட்டத்தில் தெரிணியகல, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பெல்மடுல்ல, எலபாத்த, கலவான, நிவித்திகல, அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குமே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.