Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

Y2K Three அமைப்பின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழிகாட்டல்

Posted on July 12, 2026 by Admin | 325 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹபீஸ்)

Y2K Three சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு அட்டாளைச்சேனை இக்றஹ் வித்தியாலயத்தில் நேற்று (11.07.2026) சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் அதிபர் கே.எம். ஜனூனின் வழிகாட்டலில் உப தலைவர் எம்.ஏ. இஹ்ஸான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாக உறுப்பினரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான எஸ். அம்ஜத்கான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இக்கருத்தரங்கில் சுமார் 75 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் அனஸ் வளவாளராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பெறுமதிமிக்க வழிகாட்டல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பாஹிம், தரம் 5 பொறுப்பாசிரியர் எம்.ஏ.சி. சுஹைல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் Y2K Three அமைப்பின் செயலாளர் ஏ.எம். கபீல், பொருளாளர் சஹீல், உப செயலாளர் றிஸ்வி மௌலவி, அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஐ. ஹஸ்பி மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான எம்.எச்.எம். சஜாத், கே.ஏ. ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டு தமது பங்களிப்பினை வழங்கினர்.

இந்நிகழ்வின் இறுதி அம்சமாக அண்மையில் நடைபெற்ற பரீட்சைகளில் 145 புள்ளிகளுக்கும் அதிகமாகப் பெற்று சித்தியடைந்த 13 திறமைசாலி மாணவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்..