Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

மத்திய கிழக்கு மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலை உயர்வு

Posted on June 18, 2025 by Hafees | 275 Views

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.38 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.45 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.