Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

கண்டி, நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை (04) விடுமுறை

Posted on August 3, 2026 by Admin | 254 Views

மலையகப் பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஆகிய அனர்த்த சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.