Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

அக்கறைப்பற்று கல்வி வலய பாடசாலைகளுக்கான புதிய அதிபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு

Posted on August 4, 2026 by Admin | 1924 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்- அப்துல்லாஹ்)

அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்களின் பெயர்ப்பட்டியல் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் கல்வித் தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த நியமனங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கல்வி வலயத்தில் காணப்படுகின்ற பல்வேறு பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்காக, தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இதற்கான உத்தியோகபூர்வ நேர்முகப் பரீட்சைகள் அண்மையில் வலயக் கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்டன.

கல்வி அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக, தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் மிகவும் வெளிப்படையான முறையில் இந்தத் தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.

நேர்முகப் பரீட்சைகளின் முடிவுகளின் பிரகாரம், தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்களின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் பெயர்கள் அடங்கிய விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புதிய அதிபர்களின் நியமனத்தினூடாக, அக்கறைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள், பௌதீக வள அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் அடைவு மட்டங்கள் என்பன மேலும் சிறப்படையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.

தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்கள் எதிர்வரும் சில தினங்களில் தமக்குரிய பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.