Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பல விமான சேவைகள் இரத்து

Posted on June 18, 2025 by Arfeen | 293 Views

இந்தோனேசியாவின் பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும்.ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.மேலும், ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.