Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம். அஸ்ஹர் சத்தியப்பிரமாணம்

Posted on August 8, 2026 by Admin | 141 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர் – அம்ஜத்)

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம். அஸ்ஹர் மற்றும் புதிய உறுப்பினராக எம்.எச். சுபைதா ஆகியோர் உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டனர்.

தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் விசேட பங்குபற்றுதலுடன் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

சமாதான நீதவானும், தேசிய காங்கிரஸின் பொருளாளருமான ஜே.எம். வசீர் (LLB) முன்னிலையில் புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் தமக்கான சத்தியப்பிரமாணத்தை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.