Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

பொத்துவிலில் வெற்றிகரமாக நிறைவடைந்த டெங்கற்ற கிழக்கு செயற்றிட்டம்

Posted on August 9, 2026 by Admin | 66 Views

(பொத்துவில் செய்தியாளர்- ஹபீஸ்)

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று (09) பொத்துவில் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பி.பசூர்கான் ஏற்பாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான முஷர்ரஃப் முத்துநபீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் , பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஷித், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் , கட்சியின் பிரதித் தலைவருமான பைசால் காசிம், கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரருமான எம்.ஐ.எம்.மன்சூர், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் அம்பாரை மாவட்டச் செயலாளர் ஏ.சீ.சமால்டீன், செயற்றிட்ட முகாமையாளர் எம்.ஐ.ஸாஹிர்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வைத்தியசாலை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர், பிரதேச சபை ஊழியர்கள், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.