Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Posted on August 17, 2026 by Admin | 179 Views

நாட்டின் பல மாவட்டங்களில் நாளை (18) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம் செலுத்த வேண்டிய’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கே இந்த வெப்பமான வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் (Heat Index), அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பமானது அதிகளவில் காணப்படலாம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், பகல் நேரங்களில் வெயிலில் நடமாடுவதைக் குறைத்துக்கொள்வதுடன், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (17) மாலை 4.00 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட அறிவித்தல், நாளைய தினத்திற்கு முழுமையாகச் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.