Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted on June 19, 2025 by Hafees | 292 Views

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் 356 சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 9,190 வரை அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள தரவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் நிறுவனப் பராமரிப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் தெருவோரக் குழந்தைகளுக்காக 5,000 ரூபா உதவித்தொகை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.