Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

மாணவிகளின் புத்தாக்கங்களை உலகிற்கு பறைசாற்றிய ஒலுவில் அல்-ஜாயிஸ்ஸா விஞ்ஞானக் கண்காட்சி

Posted on October 4, 2026 by Admin | 101 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- பி.எம்.ஆரிப்)

அட்டாளைச்சேனை கல்விக்கோட்டத்திற்குட்பட்ட ஒலுவில் அல்-ஜாயிஸ்ஸா மகளிர் கல்லூரியில் மாணவிகளின் விஞ்ஞான அறிவு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி கடந்த 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிபர் எஸ்.எம்.பி.எம். அரூஸ் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரதி அதிபர் ஏ.எல்.எப். டில்ஸா ரோஸ் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.சி. ஜூனைட் , சிறப்பு அதிதியாக உப பீடாதிபதி ஏ.எஸ்.எம். சதாத், விசேட அதிதிகளாக இணைப்பாளர் எம்.சி.ஏ. ஜெஸீம், விரிவுரையாளர் எம்.சி. முஹம்மட் மபாஸ் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் தொடருறு கற்கை ஆசிரியர் மாணவன் ஜே. ஜெயநிவேதிகனின் சிறப்பான ஏற்பாட்டில் இக்கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் பாடசாலையின் விஞ்ஞானப் பாட ஆசிரியைகளான திருமதி எம்.ஆர்.என்.பி.ஆர். தௌலத், திருமதி எஸ்.எம். ரெனோஷா, ஆசிரியர் பயிலுநர்கள் மற்றும் மாணவிகளின் பூரண ஒத்துழைப்புடன் நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் தளமாக அமைந்த இக்கண்காட்சியை பிரதேசத்திலுள்ள ஏனைய பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்வத்துடன் வருகை தந்து பார்வையிட்டமை நிகழ்வின் விசேட அம்சமாகும்.