Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

யாசகம் மற்றும் சாலைவிற்பனை — சிறுவர்களை பாதுகாக்க நாடளாவிய பொலிஸ் சுற்றிவளைப்பு

Posted on June 21, 2025 by Hafees | 452 Views

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் யாசகம் கேட்பது மற்றும் பொருட்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி கடந்த வியாழக்கிழமை (19) நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 21 சிறுவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த சிறுவர்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு , நுகேகொடை , கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அநுராதபுரம், கண்டி, குருணாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது