1954 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முடிவுத் திகதி 15.10.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் இஸ்லாமிய ஷரீஆ கற்கைப் பிரிவு மற்றும் அல்குர்ஆன் முழு நேர, பகுதி நேர மனனப் பிரிவுகளுக்கே இப்புதிய மாணவர் அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஷரீஆப் பிரிவு (06 ஆண்டுகள் கற்கை நெறிக்கான தகைமைகள்):
தரம் 08 சித்தியடைந்திருக்க வேண்டும்.
க.பொ.த சாதாரண தரத்தில் (G.C.E O/L) சித்தியடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும்.
தேகாரோக்கியமுள்ளவராகவும் நல்லொழுக்கமுள்ளவராகவும் இருத்தல் அவசியம்.
அல்குர்ஆன் முழு / பகுதி நேர மனனப் பிரிவுக்கான தகைமைகள்:
தரம் 06-07 இற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
10-12 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும்.
தேகாரோக்கியமுள்ளவராகவும் நல்லொழுக்கமுள்ளவராகவும் இருத்தல் அவசியம்.
முழு நேர மனனப் பிரிவு மாணவர்களுக்கு பாடசாலைப் பாடத்திட்டத்தின் தரம் 6, 7 இற்கான பாடங்கள் கற்பிக்கப்படும் என்பது இதன் விசேட அம்சமாகும்.
வழங்கப்படும் மேலதிக பரீட்சை வழிகாட்டல்கள்:
கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பின்வரும் பரீட்சைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன:
அல் ஆலிம் முதவஸ்ஸிதா, அல் ஆலிம் தானவிய்யா, அஹதிய்யா, தர்மாச்சாரிய.
க.பொ.த சாதாரண தரம் (G.C.E. O/L) மற்றும் உயர்தரம் (G.C.E. A/L).
அறபு, தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலான தேர்ச்சி.
ICT, Plumbing, Wiring போன்ற NVQ தொழிற்கல்விப் பரீட்சை வழிகாட்டல்கள்.
இக்கல்லூரியில் ஷரீஆ கற்கைநெறியைப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களும், ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், தஜ்வீத் போன்ற விசேட துறைகளில் நுழைவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவங்களை கல்லூரியின் காரியாலயத்தில் நேரடியாகப் பெற்றுப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்திலுள்ள QR Code ஐ ஸ்கேன் செய்வதன் ஊடாகவோ அல்லது Google Form ஊடாகவோ இணையவழியிலும் விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு பிரதான வீதி, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கல்லூரியின் காரியாலயத்தை நேரடியாகவோ அல்லது 067 22 77 285 (Hotline), 077 23 74 014 (அதிபர்), 075 06 85 804 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாகவோ தொடர்புகொள்ள முடியும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் தொடர்புகளை மேற்கொள்ளலாம்.
