Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

2024(2025)க.பொ.த(சா/த) பெறுபேறுகள் வெளியீடு தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல்

Posted on June 21, 2025 by Admin | 899 Views

2024 (2025 ) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (ஜூன் 21) நள்ளிரவு வெளியிடப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பரீட்சைகள் திணைக்களம் இன்று பெறுபேறுகளை வெளியிடவில்லையெனவும், சமூக ஊடகங்களில் காணப்படும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பாமல், பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மற்றும் இணையதளங்களின் மூலமே உறுதியான அறிவிப்புகளை எதிர்பார்க்க வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.