கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் அக்கறைப்பற்று அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக கல்விப் பணிகளில் அனுபவமிக்க எம்.எஸ்.எம். அஸ்லம் (SLPS) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் 2025 ஜூன் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
புதிய அதிபர் அஸ்லம் அவர்கள், பல ஆண்டுகளாக கல்வித்துறையில் பணியாற்றி வருவதோடு, மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் ஒழுங்கமைப்பில் சிறந்த நிர்வாக அனுபவம் கொண்டவர் என அறியப்படுகிறார்.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியில் புதிய அதிபரின் பங்களிப்பு குறித்து சமூகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.