Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

தங்காலை வெல்ல துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்து – 2 மீனவர்கள் காணாமல் போனனர்

Posted on June 29, 2025 by Hafees | 489 Views

தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்டு இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடுவதற்காக, விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் வகை விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானம் வழியாக காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி தற்போது சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வருவதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான அந்த நெடுநாள் மீன்பிடி படகில் ஆறு மீனவர்கள் இருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.