பிரான்ஸில் தினமும் சுமார் 200 பேர் புகைபிடிப்பு காரணமாக உயிரிழப்பதாக அந்த நாட்டின் உள்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் அரசு புகைப்பிடிப்பைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் தலைமையிலான அரசு, உணவகங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் புகைப்பிடிப்பதற்கு முழுமையான தடையை அறிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல், சிறுவர்கள் செல்லும் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வெளிச்சூழல்களிலும் புகைப்பிடிப்பை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விதிகளை மீறுபவர்களுக்கு 130 யூரோ (சுமார் 45,000/= ரூபா) வரையிலான அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மக்களின் ஆரோக்கியத்தையும், குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளன.