Top News
| அஷ்ரஃபின் மரணம் முதல் ஈஸ்டர் தாக்குதல் வரை: சர்ஜுன் நூல்கள் வெளியீடு | | மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம் | | மாணவர்களிடம் பணம் அறவிடும் அரச பாடசாலைகள் மீது விசாரணைகள் தீவிரம் |
Jul 7, 2025

“கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ்

Posted on July 4, 2025 by Admin | 95 Views

(அபூ உமர்)

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் இக்றஃ வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு உறுப்பினராகவும் சபையின் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்கள் தனது தவிசாளர் பதவியை உத்தியோகபூர்வமாக கடமையேற்கும் “காலம் எழுதும் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்”நிகழ்வானது இன்று 04.07.2025ம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான் அவர்களினால் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தவிசாளர் உவைஸ் அவர்கள்…..

முதற்கண் இறைவனுக்கும் தனக்கு வாக்களித்த மக்கள், கட்சியின் தலைமை, செயலாளருக்கும் என்னோடு தோள் நின்று எனது வெற்றிக்காக உழைத்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் ஆகியோர்களுக்கும் நன்றிகளை நவின்றார்.

இப் பதவியை தான் மகத்துவமாக கருதுவதாகவும் மூன்று இனங்களையும் உள்ளடக்கிய இப்பிரதேச சபையில் இன பாகுபாடின்றியும் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சி என்ற கட்சி வேறுபாடின்றியும் தனது சேவைகள் தொடரும் என்றார்.

மேலும் உரையாற்றுகையில்…

பிரதேச சபையின் தவிசாளர்,உறுப்பினர்கள்,அதிகாரிகள், ஊழியர்கள் என்றால் “கொள்ளையடிப்பவர்கள், கள்வர்கள், பிரதேச சபை கள்வர்களின் கூடாரம்”என்று பொதுமக்கள் மத்தியில் கறைபடிந்து காணப்படும் எண்ணங்களை எனது பதவிக்காலத்திற்குள்  சேவைகளால் துடைத்தெறிவேன் என்றார்.

இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, சபையின் கெளரவ உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.அஸ்பர் , நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுடீன், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் யூ.எல்.உவைஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சூறா சபையின் செயலாளர் யூ.எம்.வாஹித், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், பிரதேசங்களின் மத்திய குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் , கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

எண்ணங்களின் வெளிப்பாடாக அமைந்த இன்றைய உரை போன்று எதிர்கால உங்களது சேவைகளும் அமைய நாமும் வாழ்த்துகிறோம்.