Top News
| தவிசாளர் முஷாரப்பின் தலைமையில்  புத்துயிர் பெறும் கோமாரி உச்சிமலை வீதி | | கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணி நேர நீர் துண்டிப்பு | | அட்டாளைச்சேனையில் போதைப்பொருள் விற்பனை: இரட்டையர்கள் உட்பட மூவர் கைது |
Jul 7, 2025

பொத்துவில் பிரதேச சபை திண்மக்கழிவு சேகரிப்பில் புதிய ஒழுங்கமைப்பு – தவிசாளர் முஷர்ரப் களத்தில்

Posted on July 5, 2025 by Admin | 84 Views

(சனீஜ்)

பொத்துவில்-05, சர்வோதயபுரம் பகுதியில் உள்ள பொத்துவில் பிரதேச சபைக்கு சொந்தமான திண்மக்கழிவுகள் சேகரிக்கும் நிலநிரப்பு தளத்தில் (landfill yard) மேற்கொள்ளப்பட்டுள்ள சுத்திகரிப்பு மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளைப் பார்வையிடும் முகமாக, பிரதேச சபை தவிசாளர் கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அவருடன் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் இணைந்து, தளத்தில் நடைபெற்று வரும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு, தேவைப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் கலந்துரையாடினர்.