Top News
| செம்மணி புதைகுழியில் 47 எலும்புகள் கண்டுபிடிப்பு-12வது நாள் | | கர்ப்பம் தரிக்கும் மாணவிகளுக்கு அரசு நிதி உதவி-புதிய சர்ச்சை திட்டம் | | வாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்  |
Jul 6, 2025

புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

Posted on July 5, 2025 by Sakeeb | 28 Views

அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது முக்கியமான நிதி பிரேரணை ஒன்றுக்கு பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் டரம் அறிமுகப்படுத்திய புதிய வரித்திருத்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருள்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, தேசிய பாதுகாப்புக்காக 150 பில்லியன் அமெரிக்க டொலரும் குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்க நடவடிக்கைகளுக்காக 100 பில்லியன் டொலரும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரேரணையை குறித்த வாக்கெடுப்பில் 218 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்ததுடன், 214 உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் இந்த பிரேரணை நிறைவேறியது.

இதன் மூலம், பாதுகாப்பு மற்றும் குடியேற்ற துறைகளில் வருங்கால செலவுகளை முன்னிட்டு அமெரிக்க அரசு தனது திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருவதை இவ்வொதுக்கீடு உறுதி செய்கிறது.