(குரு -சிஷ்யன்)
அந்-நூர் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றம் 2025 தேர்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, சமூக விஞ்ஞானப் பாட இணைப்பாளர் MAS. ஹில்மிக்கார் ஆசிரியரின் நெறிப்படுத்தலிலும், பிரதி அதிபர் ரமீஸ் அவர்களின் வழிகாட்டலிலும் மாணவர்களின் நேர்த்தியான பங்கேற்புடன் நடந்தேறியது.
நிகழ்வின் சிறப்பம்சமாக, தேர்தல் முறையும், தேர்தல் பொருள்களும் தேசிய பாராளுமன்ற தேர்தலை ஒத்த வகையில் தயார் செய்யப்பட்டிருந்தன. மாணவர்கள், ஒரு உண்மையான தேர்தல் சூழலில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றதுடன், வாக்களிப்பு முறையை நேரிலேயே அனுபவித்தனர்.
தேர்தல் தொடர்பான அனைத்து கட்டத்திலும் மாணவர்கள் ஆர்வமாக ஈடுபட்டு செயல்பட்டமை, எதிர்கால பொது நிர்வாகத் துறையில் தலைமை திறன்கள் வளரக்கூடிய ஒரு மேடையாக அமைந்தது.