Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸுஹைல் பிணையில் விடுவிப்பு

Posted on July 15, 2025 by Admin | 454 Views

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸுஹைல் தொடர்பான வழக்கு இன்று (15.07.2025) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ஸுஹைல் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிணையில் விடுவிக்க வேண்டியதற்கான சட்டமா அதிபரின் ஆலோசனையை, தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அனுராத ஹேரத் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த ஆலோசனையை பரிசீலித்த நீதவான், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

ஸுஹைல் சார்பில் வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி கீத்ம பெர்னாண்டோ, மற்றும் சட்டத்தரணிகள் இல்ஹாம் ஹஸனலி, அஷ்ரப் முக்தார் மற்றும் பெஹ்ஷாத் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகி அவருக்கு சட்டபாதுகாப்பு வழங்கினர்.